பெற்ற விருதுகள்


  • 2025

    சென்னையில் உள்ள ராஜஸ்தான் அசோசியேஷன் சிறந்த பொதுச் சேவைக்காக வழங்கிய விருது

  • 2018

    இலக்கியச் சிந்தனை அமைப்பு இவர் எழுதிய ‘மூளைக்குள் சுற்றுலா’ என்னும் நூலை 2018-ஆம் ஆண்டிற்கான இரண்டு சிறந்த நூல்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கியது.

  • 2017

    ‘இலக்கியத்தில் மேலாண்மை’ புத்தகத்திற்கு தினத்தந்தி நாளிதழ் இரண்டு லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய சிறந்த நூல் விருது வழங்கியது. இந்த விருது பாரதப் பிரதமர் அவர்களால் வழங்கப்பட்டது.

  • 2012

    ‘பத்தாயிரம் மைல் பயணம்’ நூலிற்காக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த நூலுக்கான விருது

  • 2011

    வாஷிங்டனில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் புறநானூறு குறித்து சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை முதல் பரிசைப் பெற்றது

  • 2005

    அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் திருக்குறள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை முதல் பரிசைப் பெற்றது

  • 2005

    ‘மூளைக்குள் சுற்றுலா’ நூலுக்கு தமிழ் வளர்ச்சித் துறை முதல் பரிசளித்தபோது, தலைமைச் செயலாளராக இருந்ததால் அதை ஏற்க மறுத்தார்.

  • 2003

    மதுரை தமிழ்ச் சங்கத்தால் வழங்கப்பட்ட சர் ராஜா முத்தையா செட்டியார் விருது

  • 1998 & 2003

    ‘ஐ.ஏ.எஸ் தேர்வும் அணுகுமுறையும்’ மற்றும் ‘ஏழாம் அறிவு’ நூல்களுக்காக பாரத ஸ்டேட் வங்கியின் விருது

  • 1998

    ‘ஆத்தங்கரை ஓரம்’ நூலிற்காக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த நாவலுக்கான விருது

  • 1995

    ‘வாய்க்கால் மீன்கள்’ நூலிற்கான தமிழக அரசின் சிறந்த கவிதைத் தொகுப்பு விருது